/* */

சிவகாசி அருகே ரூ.40 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுக்கிரவார்பட்டி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர் ஆகியோர் திறந்து வைத்தனர்

HIGHLIGHTS

சிவகாசி அருகே  ரூ.40 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
X

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி சுக்கிரவார்பட்டி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் சுக்கிரவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தில் இன்று (10.07.2021) ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் (பி) லிமிடெட் சார்பில் ரூ.40 இலட்சம் மதிப்பில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர், அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போர்கால அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து சிறப்பாக செயல்படுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு தேயையான ஆக்ஸிஜன் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் ஆக்ஸிசன் உற்பத்தி மையங்கள் திறக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜன் தடையின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கும் நோக்கில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு உற்பத்தி ஆகும் ஆக்ஸிஜன் சிலிண்டர் உருளை மூலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவைப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு 48 ஆக்சிஜன் சிலிண்டர்கள் நிரப்ப முடியும் என தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்ரமணியன், சிவகாசி சார் ஆட்சியர் பிருதிவிராஜ், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் விவேகன்ராஜ், ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர், ஆண்டாள் கோவில் தக்கார் கே.ரவிச்சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 July 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...