சிவகாசி அருகே காயல்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு

சிவகாசி அருகே காயல்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு
X

சிவகாசி அருகே கனமழை காரணமாக காயல்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கனமழை காரணமாக காயல்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கனமழை காரணமாக காயல்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. மாதாங்கோவில்பட்டி தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது குறிப்பாக சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.

இந்நிலையில் வெம்பக்கோட்டை வைப்பாறு அணை நிரம்பியதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அணை திறக்கப்பட்டது - தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சிவகாசி அருகே வைப்பாற்றில் கலக்கும் காயல்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் சிவகாசி, ஆலங்குளம், எதிர்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கபட்டுள்ளது. பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பல்வேறு கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீர்நிலைகளை பார்வையிட செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்