சிவகாசியில் சரவெடி மீதான தடையை நீக்க கோரி பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சரவெடி தயாரிக்க விதித்துள்ள தடையை நீக்க கோரி சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் முன்பு பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
உச்சநீதிமன்றம் சரவெடி தயாரிக்க விதித்துள்ள தடையை நீக்க கோரி சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1400 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 3 இலட்சம் என 7 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சில வருடங்களாகவே உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
பட்டாசு தயாரிப்பதற்கு பேரியம் நைட்ரேட் மூலப்பொருளை சேர்க்கக் கூடாது எனவும் சரவெடி தயாரிக்க முற்றிலுமாக நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி என்பது 20 சதவீத மட்டுமே தயாரிக்க முடியும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் சரவெடி பட்டாசுக்கு தடை விதித்துள்ள நிலையில் சரவெடி பட்டாசு தயாரிப்பு பணிகளை மட்டுமே நம்பியுள்ள பட்டாசு தொழிலாளர்கள் சர வெடி பட்டாசு தயாரிக்க அனுமதிக்கக் கோரி சிவகாசி அருகே உள்ள மாரனேரி வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டாசு ஆலையை விரைவில் திறக்க வேண்டும், பட்டாசு தொழிலை முழுமையாக பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu