சிவகாசியில் சரவெடி தயாரிப்பு தடையை நீக்க பட்டாசு தாெழிலாளர்கள் முற்றுகை

சிவகாசியில் சரவெடி தயாரிப்பு தடையை நீக்க  பட்டாசு தாெழிலாளர்கள் முற்றுகை
X

உச்சநீதிமன்றம் சரவெடி தயாரிக்க விதித்துள்ள தடையை நீக்க கோரி சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

சரவெடி தயாரிக்க விதித்துள்ள தடையை நீக்க சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை.

உச்சநீதிமன்றம் சரவெடி தயாரிக்க விதித்துள்ள தடையை நீக்க கோரி சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1400 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 3 இலட்சம் என 7 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சில வருடங்களாகவே உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.பட்டாசு தயாரிப்பதற்கு பேரியம் நைட்ரேட் மூலப்பொருளை சேர்க்கக் கூடாது எனவும் சரவெடி தயாரிக்க முற்றிலுமாக நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி என்பது 20 சதவீத மட்டுமே தயாரிக்க முடியும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் சரவெடி பட்டாசுக்கு தடை விதித்துள்ள நிலையில் சரவெடி பட்டாசு தயாரிப்பு பணிகளை மட்டுமே நம்பியுள்ள பட்டாசு தொழிலாளர்கள் சர வெடி பட்டாசு தயாரிக்க அனுமதிக்கக் கோரி சிவகாசியில் செயல்பட்டு வரும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தினர்.

பட்டாசு ஆலையை விரைவில் திறக்க வேண்டும், பட்டாசு தொழிலை முழுமையாக பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையையும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்து வந்த வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை முதன்மை இயக்குனர் தியாகராஜன் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துதல் அடிப்படையில் முற்றுகை கைவிடப்பட்டது பட்டாசுத் தொழிலாளர்கள் சார்பாக கோரிக்கை மனு அதிகாரியிடம் அளித்தனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!