சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து- ஒருவர் படுகாயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில்  தீ விபத்து- ஒருவர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை. 

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செந்தில்குமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பேன்சி ரக திரி வைக்கும்போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் செல்வி என்பவர் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு, சிவகாசியில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சட்டவிரோதமான பட்டாசு தயாரிப்பு குறித்து, திருத்தங்கல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்