இரு பிரிவினரிடையே மோதல் -போலீசார் குவிப்பு

இரு பிரிவினரிடையே மோதல் -போலீசார் குவிப்பு
X

சிவகாசி அருகே கோடாங்கிபட்டியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதின் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே திருவேங்கடபுரத்தைச் சேர்ந்த ஒருவர் அருகில் உள்ள கோடாங்கிபட்டி கிராமத்திற்கு சென்றபோது அதே கிராமத்தைச் சேர்ந்த நபர்களால் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் பின்னர் திருவேங்கடபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் 80க்கும் மேற்பட்டோர் சென்று அங்கு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு டிஎஸ்பி.,உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!