சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் காயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் காயம்
X

ஜமீன் சல்வார் பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

சிவகாசி அருகே ஜமீன் சல்வார் பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் காயம் காவல்துறையினர் விசாரணை.

சிவகாசி அருகே ஜமீன் சல்வார் பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் காயம் காவல்துறையினர் விசாரணை.

சிவகாசியில் சுமார் 700க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலை பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து வெடிவிபத்து ஏற்பட்டு வரும் நிலையில்.

சிவகாசி ஜமீன் சல்வார்பட்டியில் ரவிந்திரன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ கிருஷ்ணா பேப்பர் கேப்ஸ் எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருபதுக்கும் மேலான தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது திடீரென்று உராய்வின் காரணமாக லேசான வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தில் கதிர்வேல் என்பவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வெடிவிபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லேசாக ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்