சிவகாசி அருகே மின் கம்பம் உடைந்து மின் வாரிய ஊழியர் உயிரிழப்பு

சிவகாசி அருகே மின் கம்பம் உடைந்து மின் வாரிய ஊழியர் உயிரிழப்பு
X

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்காெண்டனர்.

திருத்தங்கல் பகுதியில் மின் இணைப்பு கொடுக்கும் பணியின்போது மின் கம்பம் உடைந்து விழுந்து மின் வாரிய ஊழியர் உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் புதியதாக மின் இணைப்பு கொடுக்கும் பணியின்போது மின் கம்பம் உடைந்து விழுந்து மின் வாரிய ஊழியர் பலி. ஒருவர் காயம்.

சிவகாசி திருத்தங்கல் அருகே உள்ளது கண்ணன் காலனி. இந்தப் பகுதியில் புதியதாக மின்சார இணைப்பு கொடுப்பதற்காக மின்வாரிய ஊழியர்கள் காளிராஜ் முருகேசன் இருவரும் புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட மின் கம்பம் உடைந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த மின் வாரிய ஊழியர் காளிராஜ் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முருகேசன் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருத்தங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story