கொரோனோ பரவலை தடுக்க நவீன இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி

கொரோனோ பரவலை தடுக்க நவீன இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி
X
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் கொரோனோ பரவலை தடுக்க நவீன இயந்திரம் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனோ பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில், அதி நவீன இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 20 அடி சுற்றளவிற்கு கிருமி நாசினி தெளிக்கும் வகையில் உள்ள இந்த இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுவதால் கால விரயம் தவிர்க்கப்படுவதாக நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பாண்டித்தாய் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனோ பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தவறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!