சிவகாசி அருகே சமூக வலைதளங்களில் அவதூறு: அரிவாளால் வெட்டிய இருவர் கைது

சிவகாசி அருகே சமூக வலைதளங்களில் அவதூறு: அரிவாளால் வெட்டிய இருவர் கைது
X

திருத்தங்கல் பகுதியில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருத்தங்கல் பகுதியில் சமூக வலைதளங்களில் அவதூறாக சித்தரித்தாக மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு. இருவர் கைது போலீசார் விசாரணை.

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் சமூக வலைதளங்களில் அவதூறாக சித்தரித்தாக மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு. இருவர் கைது காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஆலமரத்துபட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (16) இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் இந்நிலையில் இவரது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தவறாக சித்தரித்தாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ் பாண்டி மற்றும் கார்த்திக்ராஜா ஆகியோரிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாரியம்மன் கோவில் அருகே கார்த்திக் ராஜா நின்று கொண்டிருந்த பொழுது அங்கு வந்த ஹரிஷ் பாண்டி மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர் கார்த்திக்ராஜா இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது .இதில் இருவரும் வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதல் ஏற்பட்ட நிலையில் கார்த்திக் ராஜா படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கார்த்திக் ராஜாவின் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த மோதல் குறித்து ஹரிஸ்பாண்டி, மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business