அனுமதியின்றி கிராவல் கொண்டு வந்த டிப்பர் லாரி பறிமுதல்: டிரைவர் கைது

அனுமதியின்றி கிராவல் கொண்டு வந்த  டிப்பர் லாரி பறிமுதல்: டிரைவர் கைது
X
சிவகாசி அருகே, அனுமதியின்றி கிராவல் கொண்டு வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்து டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சிவகாசி கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால், எஸ்.என்.புரம் சிவகாசி ரோட்டில், வாகனத்தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தபோது, அதில் 3 யூனிட் கிராவல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அந்த கிராவல் உரிய அனுமதி இன்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த ஆண்டியப்பன் (வயது 40) என்பவரை, திருத்தங்கல் போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நமஸ்கரித்தான்பட்டியை சேர்ந்த பழனிபோஸ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags

Next Story
crop opportunities ai agriculture