தனிமனித இடைவெளி இல்லாமல் சிவகாசி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள்

தனிமனித இடைவெளி இல்லாமல் சிவகாசி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள்
X

சிவகாசி மார்க்கெட் பகுதியில் சமூக இடைவெளி இல்லாமல் நடமாடும் மக்கள்.

மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி சிவகாசி மார்க்கெட் வியாபாரிகள் காய்கறி அதிக விலைக்கு விற்கப் படுவதாகவும் பொதுமக்கள் வேதனை.

நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் சிவகாசியில் பொதுமக்கள் தனிமனித இடைவெளி இல்லாமல் பொருட்களை வாங்கிவருகின்றனர்.

தமிழக அரசு கொரனோ பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது இந்நிலையில் நேற்றும் இன்றும் அனைத்து கடைகளும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் சிவகாசியில் இன்று பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக தனிமனித இடைவெளி இல்லாமல் வாங்கிச் சென்று வருகின்றனர்.

மேலும் இன்று ஒரு நாள் மட்டும் கடைகள் திறக்க அனுமதி அளித்த நிலையில் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி வியாபாரிகள் காய்கறி அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனையடைந்நுள்ளனர். நேற்று கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.நேற்று கத்தரிக்காய் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 20 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதேபோல் உருளைக்கிழங்கு , முட்டைகோஸ் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1287 கொரனா தொற்று அதிகரித்துள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மக்கள் அச்சமில்லாமல் இப்படி திரிவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு