விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற பிரியங்காகாந்தி கைதைக்கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் உ.பி. துணை முதல்வர் கேசவ் மவ்ரியா மற்றும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் இன்று (04.10.2021) பங்கேற்க இருந்தனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல மாதங்களாகியும் வீரியம் குறையாமல் போராடி வரும் விவசாயிகள் கருப்புப் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி விவசாயிகள் மீது ஆளும் பாஜக ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனது வாகனம் மோதியதில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் விவசாயிகளுக்கு எதிராக ஏராளமான பாஜக குண்டர்கள் ஒன்று கூடி வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு பத்திரிக்கையாளர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற பிரியங்கா காந்தி கைது செய்த உத்தரபிரதேச அரசை கண்டித்தும் சிவகாசி பேருந்து நிலையம் முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai powered agriculture