தமிழகத்தில் திமுகவிற்கு மாற்று பாஜக தான் - அண்ணாமலை திட்டவட்டம்

சிவகாசியில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திந்து பேசினார்.
சிவகாசியில் நடைபெற்ற பாஜக இளைஞர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு.
தமிழகத்தை விட, மஹாராஷ்டிரா கொரோனோவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டுமே இல்லாத கொரோனோவை காரணம் காட்டி பொத்தம் பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. வரைமுறை செய்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி வழங்க வேண்டும்
தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா தடை உத்தரவு முடிவை மறுபரிசீலனை செய்து கட்டுப்பாடுகளுடன் கொண்டாட அனுமதி வழங்கும் என நம்புகிறோம். 10, 11,12ம் தேதிகளில் பாஜக சார்பில் 1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட உள்ளோம்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஆட்சிக்கு வந்தவுடன் ஊரடங்கு அமல்படுத்த மாட்டேன் என மு.க.ஸ்டாலின் கூறினார். அப்போது பேசிய ஸ்டாலின் வேறு தற்பொழுது ஆட்சிக்கு வந்தவுடன் பேசிய ஸ்டாலின் வேறு.
கொடநாடு விவகாரத்தை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தேவையில்லாமல் சிக்க வைப்பதற்காக தனி மனித தாக்குதல் நடைபெறுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் தலைவர்களை வழக்கில் சேர்ப்பதை பாஜக கண்டிக்கிறது. பாரபட்சம் இல்லாமல் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்
இந்தியாவில் 2024 பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பாஜக வெல்லும். தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவிற்கான இடம் உருவாகிவிட்டது. தமிழகத்தில் பாஜகவா, திமுகா என்கின்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். வரும் காலம் பாஜகவிற்கான காலமாக இருக்கும்
அதிமுகவுடனான கூட்டணி குழப்பம் இல்லாமல் செல்கிறது. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து தேர்தல் ஆணையத்தின் அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்படும்.
பட்டாசு தொழில் மேம்படுத்த மத்திய அரசு எப்பொழுதும் துணை நிற்கும். கொரோனோவை காரணம் காட்டி மட்டுமே பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுபோன்ற முடிவை மேற்கொள்ளாது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu