ஹோலி கொண்டாடி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஹோலி கொண்டாடி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

தேர்தலை முன்னிட்டு வடமாநில மக்களிடம் வாக்கு சேகரித்த போது அவர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் சிவகாசி பெண் வேட்பாளர் லக்ஷ்மி கணேசன் ஈடுபட்டார்.

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் லக்ஷ்மி கணேசன் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சிவகாசியில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் கரணேசன் காலனி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வடமாநிலத்தவர்களிடம் வாக்கு சேகரித்த போது அவர்களின் பிரதான பண்டிகையான ஹோலி பண்டிகையை அப்பகுதி மக்களுடன் வர்ணம் பூசி கொண்டாடியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!