சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன் தீவிர பிரசாரம்

சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன் தீவிர பிரசாரம்
X
சிவகாசி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன் தொகுதி முழுவதும் சூறாவளியாக சுற்றி வந்து தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

பட்டாசு நகரமான சிவகாசி சட்டமன்ற தொகுதியில் கடந்த இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தற்போது சிவகாசி தொகுதியில் அதிமுக சார்பில் பெண் வேட்பாளர் லட்சுமி கணேசன் போட்டியிடுகிறார்.

நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் இவர் பொதுமக்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் மக்கள் சேகரிப்பில் ஈடுபட்டார்.

இன்று திருத்தங்கல், இந்திரா நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பட்டாசு தொழிலை பாதுகாக்க பாடுபடுவதாக பட்டாசு தொழிலாளர்களிடம் வாக்குறுதியளித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!