சிவகாசியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட் விற்பனை

சிவகாசியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட் விற்பனை செய்ததாக 18 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதை புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து சிவகாசி டி.எஸ்.பி., பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில் சிவகாசி உட்கோட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்ததாக திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த குமார் (50) முருகானந்தம் (43) கணேசன் (60) பாஸ்கரன்(54) சிவகாசி காந்தி ரோடு கணேசன் (48) மாரிமுத்து தெரு முனியப்பன் (49) குருவன் (61) சிவா (21) முஸ்லிம் ஓடை தெரு சிக்கந்தர்ஷேக்மதர் (37) செங்கமலநாசசியார்புரம் மாரிமுத்து (47) விஸ்வநத்தம் அய்யாதுரை (42) தாழைமுத்து(34) சாட்சியாபுரம் குருசாமி (56) ராஜ்குமார் (44) நேரு காலனி
அன்பரசன் (52) ) முனீஸ்வரன் காலனி முத்துக்குமார், நாரணபுரம் புதூர் செல்வக்குமார், மீனாட்சி காலனி மதிவாணன் (50) குமிழங்குளம் காளிமுத்து (20) சித்துராஜபுரம் வெங்கடேஷ் (19) முனீஸ்வரன் காலனி முனியராஜ் (40) ஆகிய 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 18 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் ரூ.11ஆயிரம் மதிப்புள்ள ௧௪௮௩ புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கறி எடுத்து சமைக்காததால் விரக்தியில் முதியவர் தற்கொலை:
சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி புதுக்காலனியை சேர்ந்தவர் கனகராஜ் (65) இவரது மனைவி கறி எடுத்து சமைக்காததால் விரக்தி அடைந்தவர், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார். ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, ல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu