சிவகாசி - கண்டெய்னர் லாரி மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு.

சிவகாசி - கண்டெய்னர் லாரி மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு.
X

சிவகாசி லாரி விபத்து.

அறுபட்டு சாலையின் நடுவே தொங்கிக்கொண்டிருந்த மின்சார வயரில் அறுபட்டு செந்தில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவகாசி அருகே கண்டெய்னர் லாரி மின்கம்பத்தில் மோதி மின்சார வயரில் கழுத்து அறுபட்டு ஒருவர் உயிரிழந்தார்.

சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் கிராமத்தில் வசித்தவர் செந்தில் குமார் (வயது 44) இவர் சிவகாசி பேருந்து நிலையத்தில் ஆவின் பால் நிறுவன தேனீர் கடை நடத்தி வருகிறார் .

செந்தில்குமார் அவரது உறவினர் நந்தகுமார் வயது ( 25) மற்றும் ஆவின் பால் நிறுவன தேனீர் கடை ஊழியர் பாஸ்கர் ( 55 )ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் அனுப்பங்குளத்திலிருந்து சிவகாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர் .அப்போது இரு சக்கர வாகனத்திற்கு முன்பாக சாத்தூரிலிருந்து சுக்கிரவாரபட்டி நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பாறைப்பட்டி அருகே கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மின்கம்பம் மீது மோதிய விபத்தில் மின்சார வயர்கள் அறுபட்டு சாலையின் நடுவே தொங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறியாமல் பின்பக்கமாக இருசக்கர வாகனத்தில் வந்த செந்தில்குமாரின் கழுத்து சாலையின் நடுவே தொங்கிக்கொண்டிருந்த மின்சார வயரில் அறுபட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . காயம் பட்ட தேனீர் கடை ஊழியர் பாஸ்கர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

பலியான செந்தில்குமாரின் உறவினர் நந்தகுமார் எந்தவிதமான காயமும் இன்றி உயிர் தப்பினார் . இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிவகாசி கிழக்கு பகுதி காவல் நிலைய போலீஸார் தப்பியோடிய கன்டெய்னர் லாரி ஓட்டுநர் தூத்துக்குடியைச் சேர்ந்த காந்தி வயது 34 என்பவரை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?