தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது - உதவித்தொகை வாங்க குவிந்த மக்கள்.

தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது -  உதவித்தொகை வாங்க குவிந்த மக்கள்.
X
கொரோனோ பரவல் அதிகரிக்கும் அபாயம்...

சிவகாசி அருகே தனிமனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு நிவாரண உதவித்தொகை வாங்க குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் தமிழக அரசின் கொரோனோ நிவாரண தொகை வழங்கும் பணிகள் பல்வேறு நியாயவிலைக்கடைகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எந்த ஒரு சமூக இடைவெளியும் கடைபிடிக்காமல் சுமார் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடியதால் மேலும் கொரோனோ பரவல் அதிகரிக்கும் அபாயம்உள்ளது. காவல்துறை கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!