"பட்டாசு தொழிலுக்கு பதிலாக மாற்று தொழில்" தவறான பார்வை: எம்.பி மாணிக்கதாகூர்
சிவகாசியில் நடைபெற்ற வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்க தாகூர் செய்தியாளர்கள் சந்தித்து தெரிவித்ததாவது,
பட்டாசு தொழிலை பாதுகாப்பாக மாற்றவும் இதில் உள்ள குறைபாடுகளை நீக்க மத்தியஅரசு, மாநிலஅரசு மாவட்ட நிர்வாகங்கள் துணை நிற்க வேண்டும்.விபத்தில் யார் மீதும் பழி சுமத்தி மாவட்ட நிர்வாகமும் அரசு ஒதுங்கி கொள்ள நினைப்பது சரியாக இருக்காது. பட்டாசு தொழிலை ஏற்றுமதிமிக்க தொழிலாக மாற்ற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. 2012 முதலிப்பட்டி விபத்துக்கு பின்னர் 2021 மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கு காரணமானவர்களை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு ஆய்வு செய்வதற்கு போதிய வாகன வசதி இல்லை எனக் கூறப்படுவது உண்மைதான் இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் தெரிவிப்பேன், பட்டாசு தொழிலுக்கு பதிலாக மாற்று தொழில் கொண்டுவர வேண்டுமென துரைமுருகன் தெரிவித்ததற்கு, இது மிக தவறான பார்வை,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பில் உள்ளனர். இப்படி ஒரு பார்வையில் எவரேனும் பார்க்க வேண்டாம் இது தவறான பார்வை. பட்டாசு தொழிலில் குழந்தைத் தொழிலாளர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்த தற்போது இல்லை.
பட்டாசு விபத்தில் தாய் தந்தை இழந்த குழந்தைக்கு ஆண்டுதோரும் மாவட்ட காங்கிரஸ் சார்பாக 25,000 ரூபாயும் அதன் கல்விச் செலவை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் ஏற்றுக்கொள்வதாகவும், மத்திய அரசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் பதில் 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமரிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கனவாகவே உள்ளது சிவகாசியில் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu