இருக்கன்குடி அணையில் மதகுகள் பழுதால் வீணாகும் தண்ணீர்: விவசாயிகள் கவலை

இருக்கன்குடி அணையில் மதகுகள் பழுதால் வீணாகும் தண்ணீர்: விவசாயிகள் கவலை
X

சாத்தூர் அருகே இருக்கன்குடி அணையில் மதகுகளின் வழியே வெளியேறி வீணாக வெளியேறும் தண்ணீர். 

சாத்தூர் அருகே இருக்கன்குடி அணையில் மதகுகளின் வழியே வெளியேறி வீணாகும் அணை நீர். விவசாயிகள் கவலை.

சாத்தூர் அருகே இருக்கன்குடி அணையில் மதகுகளின் வழியே வெளியேறி வீணாகும் அணை நீர். விவசாயிகள் கவலை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் வைப்பாறு மற்றும் அர்ஜுனா நதிகளின் இணைத்து குறுக்கே இருக்கன்குடி அணை கட்டப்பட்டது. கடந்த 2004ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இருக்கன்குடி அணையானது இரு ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட தாக்குதல்களை கொண்டு மிகப் பெரிய அணையாக இருந்து வருகிறது. இந்த இருக்கன்குடி அணையை சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்திற்கு உதவும் வகையிலும் திகழ்கிறது.

மேலும் விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய தீர்க்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது இந்த நிலையில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் தமிழகமெங்கும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வரும் வேளையில் இருக்கன்குடி அணையும் தற்பொழுது தனது கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கிறது. இந்தநிலையில் இருக்கன்குடி அணையில் உள்ள மதகுகள் அணை கட்டப்பட்ட நாளிலிருந்து முறையாக பராமரிக்கப்படாததால் சீரமைக்கப்படாததாலும் மதகுகள் பழுதடைந்து அதன் இடைவெளியில் அணை நீரானது வீணாக வெளியேறி வருகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் தற்பொழுது அணை நிரம்ப வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் இருக்கன்குடி அணையானது முழு கொள்ளளவையும் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. இருக்கன்குடி அணையானது ஆறு மீட்டர் கொள்ளளவு கொண்ட நிலையில் தற்பொழுது 5 மீட்டர் கொள்ளளவு எட்டியுள்ளது. எனினும் மதங்களில் சரியாக பராமரிப்பு இல்லாததால் தற்போது இந்த அணை அணை நீரினை திறந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது இவ்வாறு முறையாக பராமரிக்கப்படாமல் அணை நீர் வீணாக வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் நிலவி வருகிறது.

மேலும் அணை நீர்பிடிப்பு பகுதிகள் முழுவதும் முற்றிலும் கருவேல மரங்கள் முள் வேலி செடிகள் நிறைந்து காணப்படுவதால் நீரின் கொள்ளளவு மிகக் குறைவாகவே இருக்கும் என்பது பொதுமக்களின் கருத்து. இருக்கன்குடி அணையை குடி நீர் ஆதாரத்திற்கு நம்பியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப் பகுதிகள் நிலை கேள்விக்குரியதாக உள்ளது.

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்