சாத்தூர் அருகே கண்மாய் வரத்து கால்வாய்களை தூர்வாரிய கிராமத்து இளைஞர்கள்

சாத்தூர் அருகே கண்மாய் வரத்து கால்வாய்களை தூர்வாரிய கிராமத்து இளைஞர்கள்
X

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள அணைக்கரைப்பட்டியில் கண்மாய் வரத்து கால்வாய்களை தூர்வாரும் கிராமத்து இளைஞர்கள்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்து இளைஞர்கள் தங்களது ஊர் கண்மாய் நீர் வர வேண்டும் என்பதற்காக சாத்தூர் உப்பு ஓடை பகுதியில் இருந்து வரும் வரத்து கால்வாய் பகுதிகளை தாமாக முன்வந்து சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அரசினை எதிர்பார்த்து காத்திருந்து பலன் இல்லாததால் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது ஊர் கண்மாய் பகுதிகளை கிராமத்து இளைஞர்கள் தாமாக முன்வந்து ஆர்வமுடன் வரத்து கால்வாய்கள் தூர்வாரி தூய்மைப் படுத்தி வருகின்றனர்.

வெங்கடாசலபுரம் உப்பு ஓடை கால்வாய் பகுதியில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கு மழை நீருக்குள் இறங்கி அங்குள்ள புதர் செடிகள் மற்றும் வேலி செடிகளை அகற்றி தூய்மைப் படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
the future with ai