நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விருதுநகரில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விருதுநகரில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நகர் மற்றும் பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை அப்பகுதிகளில் உள்ள நகராட்சி ஆணையாளர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மூலம் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று முடிந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர் சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட 5 நகராட்சி மற்றும் செட்டியார்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம், எஸ்.கொடிக்குளம், சேத்தூர், சுந்தரபாண்டியம், W.புதுப்பட்டி, வத்ராப் உள்ளிட்ட 9 பேரூராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி முன்னிலையில் காணொளி கட்சி வழியாக இப்பகுதிகளில் உள்ள அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் அல்லது பேரூராட்சி செயல் அலுவலர்கள் பல்வேறு அரசு அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் இளவரசர் தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார். சாத்தூர் நகர் பகுதியில் உள்ள 24 வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் மதிமுக கட்சி சார்பிலும் திமுக சாத்தூர் நகர செயலாளர் குருசாமி நீதி மையம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!