சாத்தூர் வைப்பாற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

சாத்தூர் வைப்பாற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மாயம்
X

சாத்தூர் வைப்பாற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மாயம். தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சாத்தூர் வைப்பாற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மாயம். பல மணி நேரம் தேடியும் உடல் கிடைக்கவில்லை.

சாத்தூர் வைப்பாற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மாயம். பல மணி நேரம் தேடியும் உடல் கிடைக்கவில்லை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம். தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படித்தியுள்ளது.

காட்டுபுதுத் தெருவை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் சாத்தூர் நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மகன் ஹரிகரபிரபு (14). சிறுவன் ஹரிஹர பிரபு இன்று காலை வீட்டின் அருகே இருக்கும் வைப்பாற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். ஆற்றுக்குள் இறங்கி குளித்து கொண்டு இருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது ஆற்றில் செல்லும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளான். இதனைக் கண்ட நண்பர்கள் கூச்சலிட அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறைவீரர்கள் பல மணி நேரம் ஆற்று பகுதி முழுவதும் தேடியுள்ளனர். ஏற்கனவே ஆற்றில் வெள்ளம் செல்வதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. எனினும் சிறுவனின் உடல் கிடைக்காததால் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காவல்துறை மற்றும் நகராட்சி சார்பில் ஆற்றில் வெள்ளம் செல்வதால் குளிப்பது அப்பகுதிக்கு செல்வதோ கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தியும் இவ்வாறு சிறுவர்கள் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் சென்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil