சாத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி மாணவி உயிரிழப்பு: போலீசார் விசாரணை

சாத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி மாணவி உயிரிழப்பு: போலீசார் விசாரணை
X
சாத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி மாணவி உயிரிழப்பு. சாத்தூர் நகர் காவல்துறையினர் விசாரணை.

சாத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி மாணவி உயிரிழப்பு. சாத்தூர் நகர் காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை சேர்ந்த சந்திராதேவி(23), கரோலின்எஸ்தர்(23) ஆகிய இருவரும் சாத்தூரில் உள்ள கூட்டுறவு தொழிற் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை கல்லூரி முடிந்து இருவரும், இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சிவகாசி சாலையில் மேட்டமலையை அடுத்து தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருக்கும் போது தனியார் பள்ளியிலிருந்து வெளியே வந்த பள்ளி பேருந்து இருசக்கரவாகனம் மீது மோதியது. இதில் சந்திராதேவி, கரோலின் எஸ்தர் ஆகிய இருவரும் பலத்த காயமைடைந்த நிலையில் சந்திராதேவி மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த சாத்தூர் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கரோலின் எஸ்தரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த சந்திராதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது