பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம்

பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம்
X

சாத்தூரில் பட்டாசு தாெழிலுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

சாத்தூரில் சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

சாத்தூரில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம்.

சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி சரவெடி தடையை நீக்கி சர வெடி வெடிக்க அனுமதி வழங்கிட வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மாபெரும் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நகரச் செயலாளர் சீனிவாசன் மனோஜ்குமார் ஒன்றிய செயலாளர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டச் செயலாளர் மகாலட்சுமி, மாவட்ட பொருளாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பட்டாசு தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் சரவெடி தடையை நீக்கி சரவெடி வெடிக்க அனுமதி வழங்கிட வேண்டியும் பட்டாசு ஆலைகளை உடனடியாக திறந்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர் பின்னர் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார சாலை போக்குவரத்து சங்க தலைவர் விஜயகுமார், மாவட்ட தலைவர் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்க சுப்புராஜ் சிஐடியு ஒன்றிய தலைவர் சரோஜா, பெத்துராஜ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட தலைவர் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்க மாவட்ட நகர குழு நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story