சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
X

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் பக்தர்கள்.

தென் மாவட்ட மக்களின் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு.

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் விருதுநகர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருவது வழக்கம். மற்ற நாட்களை காட்டிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

தென் மாவட்ட மக்களின் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கருணாகரன், நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்