தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் 2 மாதங்களில் நடைமுறை
சாத்தூர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இரண்டு மாதங்களில் தொடங்கப்படும் என்றார் சாத்தூர் தேர்தல் பிரசாரத்தின் போது வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தகவல்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மதசார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சாத்தூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின் போது வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள குடும்பத்தலைவிக்கு மட்டும் தான் 1000 ரூபாய் வழங்கப்படும் எனவும் குடும்பத்தலைவர் வந்து கேட்டால் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்த அமைச்சர் குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் 1000 வழங்கும் திட்டம் இரண்டு மாதங்களில் தொடங்கப்படும்.
மேலும் மோடி ஆட்சியில் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என குற்றம் சாட்டிய அமைச்சர் விலை உயர்ந்து கொண்டே சென்றால் ஏழைகள் சமையல் எரிவாயு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். சாத்தூர் பகுதியில் திமுக ஆட்சியில் தான் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாளச்சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைவரும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளிக்க வேண்டும் என்றார் அமைச்சர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu