சாத்தூர் கோயில் பூசாரியின் இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிப்பு

சாத்தூர் கோயில் பூசாரியின்  இருசக்கர வாகனங்கள்  தீவைத்து எரிப்பு
X

சாத்தூரில் இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இரண்டு இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சாத்தூர் கோயில் பூசாரியின் இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மேலகாந்திநகரில் வசித்து வரும் கோவில் பூசாரிஅரிராமர் (58). இவரின் வீட்டின் முன்பு நேற்று இரவு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். காலையில் பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் தீ வைத்து எரிந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அரிராமர் கொடுத்த புகாரில் சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனங்களை தீயிட்டு எரித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Tags

Next Story