சாத்தூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து எம்எல்ஏ ஆலோசனை

சாத்தூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா  சிகிச்சை குறித்து எம்எல்ஏ ஆலோசனை
X
சாத்தூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை நடத்தினார்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக கொரோனோ பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ரகுராமன் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் கொரோனோ பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் பரிசோதனை விவரங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் சாத்தூர் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ குழுவினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்