சாத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி விட்டு தாய் தற்கொலை

சாத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி விட்டு தாய் தற்கொலை
X

தற்கொலை செய்துகொண்ட செல்வி.

சாத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி விட்டு தாய் தற்கொலை

சாத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் அருகே உள்ள ஒ. மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர நாராயணன்(31). இவரது மனைவி செல்வி (26). இவர்களுக்கு அனுஷ்கா (5) என்ற மகளும் மாதேஸ் (3) என்ற மகனும் உள்ளனர்.ஏற்கனவே கடந்த 6 மாதத்திற்கு முன்பு சங்கரநாராயணன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.


இந்நிலையில் இன்று இவரது மனைவி செல்வி அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்பாண்டி என்பவருக்குச் சொந்தமான காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் தனது இரண்டு குழந்தைகளையும் வீசிக்கொன்றுவிட்டு தானும் குதித்துள்ளார்.

இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்தியினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்த சாத்தூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி 2 குழந்தைகள் மற்றும் தாயை சடலமாக மீட்டனர்.

தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்தது குறித்து விசாரனை செய்து வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு குழந்தைகள், தாய் என மூன்று பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!