சாத்தூரில் சுயேட்சை வேட்பாளரிடம் ரூ.38,500 பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி

சாத்தூரில் சுயேட்சை வேட்பாளரிடம் ரூ.38,500 பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி
X

சாத்தூரில் சுயேட்சை வேட்பாளரிடம் ரூ.38,500 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சாத்தூரில் சுயேட்சை வேட்பாளரிடம் ரூ.38,500 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் அறிவிப்பு வெளியான கடந்த மாதம் 26ம் தேதி மாலையே தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதில் விருதுநகர் மாவட்டம் முழுவதும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவை நியமித்து ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெயபாண்டியனுக்கு சாத்தூர் 3வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிவகாசி துணை வட்டாட்சியர் ஜெயபாண்டியன் தலைமையில் சாத்தூர் மகளிர் சார்பு ஆய்வாளர் சர்மிளா மற்றும் காவலர்கள் சேர்ந்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சுயட்சை வேட்பாளராக போட்டியிடும் சண்முகசுந்தர்ராஜன் என்பவர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.38,500 ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தேர்தல் பறக்கும் படையினர் வருவதை அறிந்து அங்கிருந்தவர்கள் பணத்தை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். மேலும் இது குறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil