சாத்தூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு

சாத்தூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு
X

சாத்தூரில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

சாத்தூரில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

சாத்தூரில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 2022-ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் பச்சரிசி, வெல்லம், கரும்பு, நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சாத்தூர் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். சாத்தூர் தென்வடல் புதுத்தெரு, பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், வட்டாட்சியர் சீதாலட்சுமி, வருவாய்த்துறை அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் திமுக செயலாளர் குருசாமி ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself