சாத்தூரில் கெட்டுப்போன 150 கிலோ மீன்கள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

சாத்தூரில் கெட்டுப்போன 150 கிலோ மீன்கள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை
X

பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன மீன்கள்

சாத்தூரில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன 150 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் மீன்துறை உதவி இயக்குனர் மற்றும் உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் அறிவுறுத்தலின்படி சாத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன்குமார் தலைமையில் மீன்வள ஆய்வாளர் அபுதாஹீர் மற்றும் மீன் வளம் மேற்பார்வையாளர் ராம கவுண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வெங்கடாசலபுரம், பைபாஸ் ரோடு, தாயில்பட்டி ரோடு, மெயின் ரோடு, ரயில்வே பீடர் ரோடு ஆகிய பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மீன் மற்றும் இறைச்சி கடைகளில் காலாவதியான, தேதிகள் குறிப்பிடப்படாத மற்றும் கெட்டுப்போன மீன் மற்றும் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து கெட்டுப்போன 150 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture