சாத்தூர் அருகே 9 பேர் மர்ம மரணம்: சுகாதாரத்துறை ஆய்வு.

சாத்தூர் அருகே  9 பேர் மர்ம மரணம்: சுகாதாரத்துறை ஆய்வு.
X

சல்வார்பட்டி கிராமத்தில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சாத்தூர் அருகே ஒரு வார காலத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் 9 பேர் உயிரிழந்த நிலையில், சுகாதாரத் துறையினர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டி கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இங்கு பெரும்பாலோனோர் விவசாயம் மற்றும் பட்டாசு தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் சல்வார்பட்டி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக 35 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் அடுத்தடுத்து 9க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறையினர் சல்வார்பட்டி கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு கொரோனா' பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும் அந்தப் பகுதியில் கிருமி நாசினி தெளித்து தெருக்களை தூய்மைப்படுத்தியும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்