ரயில்வே மேம்பாலம் மாற்று வழியில் அமைக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் மனு
சாத்தூர் இருக்கன்குடி ரயில்வே மேம்பாலம் மாற்று வழி அமைக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
சாத்தூர் இருக்கன்குடி ரயில்வே மேம்பாலம் மாற்று வழி அமைக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திட்ட அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியம் ரயில்வே பீடர் வியாபாரிகள் சங்கம் சார்பில் இருக்கன்குடி ரயில்வே மேம்பாலம் மாற்றுப்பாதையில் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
சாத்தூர் இருக்கன்குடி ரயில்வே பாதை மிகவும் குறுகலாக இருப்பதாலும் ரயில்கள் வரும் பொழுது அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து பெரும் இடையூறு ஏற்படுகிறது என்பதாலும் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசு இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டம் வகுத்து அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு பெற்ற வேளையில் இப்பகுதி ரயில்வே பீடர் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரயில்வே மேம்பாலத்திற்கு மாற்றுப் பாதை அமைக்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் இன்று விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்ட அலுவலர் முன்னிலையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் மாற்றுப்பாதை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இம்மனுவில் ரயில்வே பீடர் சாலையில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அமைந்துள்ளது. மேலும் கோவில் மற்றும் தேவாலயங்கள் இருந்து வருகிறது என்பதையும் கருத்தில் கொண்டு மாற்றுப் பாதை அமைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் காத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஏற்கனவே இடையூறாக உள்ள இப்பகுதியில் மேம்பாலம் அமைந்தால் அதிகப்படியான இடையூறு ஏற்படும் என்றும் இடம் கையகப்படுத்தும் பணியின்போது அதிகப்படியான செலவு ஏற்படும் என்பதை வலியுறுத்தியும் மாற்றுப் பாதை அமைக்கும் பட்சத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் சிரமமின்றி அமையும் என்பதை மாற்றுப்பாதையினால் செலவு குறைக்கப்படும் என்பதை வலியுறுத்தியும் விளக்கமளிக்கப்பட்டது. ரயில்வே பீடர் வியாபாரிகளின் கோரிக்கை மனுக்களை திட்ட அலுவலர் ராமசுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.உடன் இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் வட்டாட்சியர் சீதாலட்சுமி கலந்து கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu