சாத்தூர் அருகே வாழை மரத்து பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகாஉற்சவம்

சாத்தூர் அருகே வாழை மரத்து பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகாஉற்சவம்
X

சாத்தூர் அருகிலுள்ள துலுக்கன்குறிச்சி வாழை மரத்து பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகாஉற்சவம் நடைபெற்றது.

சாத்தூரில் திருக்கார்த்திகைையை முன்னிட்டு வாழை மரத்து பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகாஉற்சவம் நடைபெற்றது.

திருக்கார்த்திகை முன்னிட்டு வாழை மரத்து பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகாஉற்சவம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள துலுக்கன்குறிச்சி வாழை மரத்து பாலமுருகன் கோவில் உள்ளது இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தினங்கள் அன்று சூரசம்காரம் மற்றும் சிறப்பு விழாக்கள் நடைபெறும். அந்த வகையில் இன்று திருக்கார்த்திகை முன்னிட்டு வாழை மரத்து பாலமுருகன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

மாலையில் கார்த்திகை சிறப்பு நிகழ்ச்சியாக சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துலுக்கன்குறிச்சி பகுதி மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!