இந்திராகாந்தி பிறந்த நாள் விழா: சாத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை

இந்திராகாந்தி பிறந்த நாள் விழா: சாத்தூரில்  காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை
X

சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திராகாந்தியின் 104வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சாத்தூரில் காங்கிரஸ் சார்பில் இந்தியாவில் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் 104வது பிறந்த நாள் விழா

சாத்தூரில் காங்கிரஸ் சார்பில் இந்தியாவில் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் 104வது பிறந்த நாள் விழா.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் 104வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். விருதுநகர் மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது முக்குராந்தல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அன்னை இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அன்னை இந்திராகாந்தியின் புகழ் ஓங்குக என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முழக்கமிட்டனர்.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னை இந்திரா காந்தியின் பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் சாத்தூர் நகர ஒன்றிய கிளை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்