தொடர்மழை: சாத்தூர் பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தொடர்மழை: சாத்தூர் பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
X

தொடர் மழையால், வெம்பக்கோட்டை ஒன்றியம் மடத்துபட்டி பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 

தொடர்மழை காரணமாக், சாத்தூர் பகுதி நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மடத்துபட்டி ஊராட்சி, தாயில்பட்டி, எட்டக்காபட்டி, விஜயகரிசல்குளம், ஏழாயிரம்பண்ணை, கங்கரகோட்டை ஊராட்சி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் மழை பெய்துள்ளது.

தேசிய ஊரக வளர்ச்சித்திட்டத்தில் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணி முழுமையாக நடைபெற்றது. இதனால் இந்த பகுதிகளில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால், அனைத்து கண்மாய், ஊருணிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
ai marketing future