சாத்தூர் அருகே 3 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

சாத்தூர் அருகே ஆலங்குளத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 3 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி வாகனத்தில் வரம்புக்கு மீறிய பணம்,பரிசு பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாத்தூர் அருகே ஆலங்குளத்தில் சங்கரமூர்த்திபட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருதனர்.

அப்போது அந்த வழியே வந்த ராம்குமார் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

அதனை அடுத்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட மூன்று லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மூன்று லட்சத்தை சாத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் துணை அலுவலர் வெங்கடேஷ் தாசில்தாரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர் அதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 3 லட்ச ரூபாய் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டத.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!