சாத்தூர் தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன்: அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

சாத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று தொகுதி மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன் என அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் வாக்குறுதி அளித்தார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவிச்சந்திரன் தேர்தல் பரப்புரை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தொகுதிக்குடப்பட்ட கிராமப்புற பகுதிகளான படந்தால், வெம்பக்கோட்டை, கோட்டைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர், வாக்கு சேகரித்து பேசிய வேட்பாளர் ரவிச்சந்திரன் கிராமப்புற மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பட்டாசு, தீப்பெட்டி தொழில்களை பாதுகாத்து தொழில் வளர்ச்சியடைய செய்வேன் என மக்கள் மத்தியில் வாக்குறுதியளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!