சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை: சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஒட்டிகள் அவதி

சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை: சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஒட்டிகள் அவதி
X

சாத்தூரில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை, மழைநீர் சாலையில் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதி.

சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை, மழைநீர் சாலையில் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதி.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வடகிழக்கு பருவ மழை போதிய அளவில் இல்லாத காரணத்தால் சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள நீர் நிலைகள் வறட்சியாக காணப்படுகின்றன. இந்நிலையில் மதியம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தாயில்பட்டி சுப்பிரமணியாபுரம் வெங்கடாசலபுரம் மேட்டமலை சின்னகாமன்பட்டி சிந்தப்பள்ளி இருக்கன்குடி நெ.மேட்டு பட்டி அம்மாபட்டி அமீர்பாளையம் சத்திரப்பட்டி சடையம்பட்டி படந்தால் போன்ற பகுதிகளில் கன மழை பெய்தது.

இந்த நிலையில் இன்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சாத்தூர் நகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டனர். சாத்தூர் பகுதியில் பெய்து வரும் மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு