சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து .

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து    .
X

கோப்புபடம்

சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து. ஒருவருக்கு லேசான காயம்

சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் 4 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் வேலையின் போது ஏற்படும் உராய்வினால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென தீப்பிடித்தது. இதில் வேலை செய்துகொண்டிருந்த நடுசுரங்குடி சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது 38) என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

தீ விபத்து ஏற்பட்ட அறை சேதமடைந்தது. உடனே தீ விபத்து குறித்து சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிரேசன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!