/* */

சாத்தூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு: போலீசார் விசாரணை

சாத்தூர் அருேகே மின்னல் தாக்கி மாடு மேய்த்த விவசாயி மற்றும் ஒரு மாடு உயிரிழப்பு. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

HIGHLIGHTS

சாத்தூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி  உயிரிழப்பு: போலீசார் விசாரணை
X

சாத்தூர் அருேகே மின்னல் தாக்கி மாடு மேய்த்த விவசாயி உயிரிழப்பு.

சாத்தூர் அருேகே மின்னல் தாக்கி மாடு மேய்த்த விவசாயி மற்றும் ஒரு மாடு உயிரிழப்பு, இருக்கன்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், இருக்கன்குடி, வண்ணிமடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சுமார் அரை மணி நேரமாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் சாத்தூர் அருகே வண்ணிமடை கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி(72). இவர் வன்னிமடை பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் மாலை வன்னிமடை காட்டு பகுதியில் வேலுச்சாமி மாடு மேய்த்து கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கியதில் பலத்த காயமைடைந்த நிலையில் வேலுச்சாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

மேலும் அவர் மேய்த்து வந்த மாடுகளில் ஒரு மாடும் உயிரிழந்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருக்கன்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இருக்கன்குடி போலீஸார் வேலுச்சாமியின் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைகாக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Nov 2021 3:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு