சாத்தூரில் ஓட்டுக்கு பணம் : அதிமுகவினர் 2 பேர் கைது

சாத்தூரில் ஓட்டுக்கு பணம் :   அதிமுகவினர் 2 பேர் கைது
X
சாத்தூரில் ஓட்டுக்கு பணம் கொடுத்த 2 அதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாத்தூரில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுகவினர் 2பேரை சாத்தூர் நகர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள மேலகாந்திநகர் பகுதியில் அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சாத்தூர் நகர் போலீஸார்,தேர்தல் பறக்கும்படையினரின் உதவியுடன் இன்று அப்பகுதியில் சோதனை நடத்தினார்கள். அப்போது அப்பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான தங்கராஜ்(44),குணசேகர்(47) ஆகியோர் ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தங்கராஜ்,குணசேகர் ஆகிய இருவரிடமிருந்து ரூ.47ஆயிரம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மேலகாந்திநகர் பகுதி வாக்காளர்களின் பெயர் மற்றும் வரிசை எண் கொண்டு நோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags

Next Story