சாத்தூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சாத்தூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

சாத்தூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரத வீதியில் சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தலைமை தாங்கினார். விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெங்கசாமி விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தூர் நகரத் தலைவர் அய்யப்பன் ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சியை ஒருங்கமைத்தார்.

மேலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளும் மகிலா காங்கிரஸ் நிர்வாகிகளும் மற்றும் துணை அமைப்பினரும் தொண்டர்களும் பொதுமக்களும் என 80க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் இந்ந ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்த கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

பெட்ரோல் டீசல் மீது மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வரியை குறைக்க வலியுறுத்தியும் அதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது என்பதை அறிவுறுத்தியும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story