சாத்தூரில் சமுதாய வளைகாப்பு விழா: வருவாய்த்துறை அமைச்சர் பங்கேற்பு

சாத்தூரில் சமுதாய வளைகாப்பு விழா: வருவாய்த்துறை அமைச்சர் பங்கேற்பு
X

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனம் வழங்கிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்.

சாத்தூரில் சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனம் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் எஸ்.ஆர்.நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சாத்தூர் நகர, ஒன்றிய பகுதிகளில் உள்ள கர்ப்பினி தாய்மார்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் விருதுநகர் மாவட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் பேசிய அமைச்சர் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் பிறந்தால் பயப்படக்கூடாது; பெருமைப்பட வேண்டும். ஏனெனில் பெண்கள் தான் பல்வேறு துறைகளில் தற்பொழுது முன்னேறி செல்கின்றனர் என்றார்.

இந்நிகழ்ச்சியில் என்.மேட்டுப்பட்டி பெரிய ஓடைப்பட்டி ஒத்தையால் உப்பத்தூர் மற்றும் சாத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சுமார் 450க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு அரசு சார்பில் சீமந்தம் மற்றும் சீர்வரிசை செய்யப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் ராஜம் வரவேற்றுப் பேசினார். சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன், சாத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil