விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
X

விருதுநகர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் மேகநாதரெட்டி ஆய்வு.

விருதுநகர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பெரிய ஓடைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்து அங்கு பயிலும் மாணவ மாணவிகளிடம் கல்வித் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள சமையலறையினை சீர்படுத்திடவும், ரூ.22.60 இலட்சம் மதிப்பீட்டில் பெரிய ஓடப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, என்.வெங்கடேஸ்வரபுரத்தில் ரூ.7.60 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியிணையும், அந்த பகுதியில் உள்ள வீடுகளில் டெங்கு பரவாமல் தடுப்பது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மேலும் அப்பகுதியில் ரூ.4.45 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஆடு, மாடு கொட்டகை திட்டத்தின் கீழ் ரூ.1.35 இலட்சம் மதிப்பீட்டில் மாட்டுக் கொட்டகை அமைக்கும் பணியினையும், மற்றும் பிரதம மந்திரி ஆகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ், 1.70 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்பட்டுவரும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சிகளில், திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்தி முருகன், வட்டாட்சியர் சீதாலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெள்ளைச்சாமி, ரவி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story