இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.24 லட்சம்
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் மற்றும் காணிக்கைப் பொருட்கள் எண்ணும் எண்ணும் பணி நடைபெற்றது. இதற்காக உண்டியல் திறக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பணம் மற்றும் பொருட்கள் கணக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ. 24 லட்சம் கிடைத்தது.
தென் தமிழகத்தில் புகழ் பெற்ற அம்மன் கோயில்களில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதம் உண்டியல் திறக்கப்பட்டு கணக்கீடு செய்வது வழக்கம். அதனை தொடர்ந்து இன்று 10 நிரந்தர உண்டியல் மற்றும் ஒரு கால்நடை உண்டியல் ஆகியவை திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கீடப்பட்டன. அதில் ரொக்கமாக 23 லட்சத்தி 99 ஆயிரத்தி 457 ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது.
காணிக்கையை கோயிலின் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. தங்கம் 111 கிராம் 500 மில்லி, வௌ்ளி 470 கிராம் கிடைத்தது. பணம் எண்ணும் பணியாட் சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலைய துறை விருதுநகர் கோயில்களின் உதவி ஆணையர் கணேசன், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், ஆகியோர் தலைமையில் பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி பூசாரி, சவுந்திர ராஜன் பூசாரி மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu