தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க கருத்தரங்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க கருத்தரங்கம்
X

திரைப்பட நடிகை ரோகிணி பெண்கள் விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்

சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் பொன்மாலைப்பொழுது என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

சாத்தூர் அருகே மேட்டமலை கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிருஷ்ணசாமி கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து "பொன் மாலைப்பொழுது " என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணசாமி கல்வி குழும தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை தலைவர் பிரியா கார்த்தி, செயலாளர் விஸ்வநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திரைப்பட நடிகை ரோகிணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெண்கள் விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணசுவாமி கல்வி குழும ஆசிரியைகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பெண்கள் முன்னேற்றத்திற்கான கல்வி முறைகள், சமுதாயத்தில் பெண்கள் விழிப்புணர்வு, சமுதாய முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு உள்ளிட்ட தலைப்புகளில் கலந்துரையாடல் நடத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!